‘இப்டி கோலி ஆக்ரோஷமாகுற அளவுக்கு யாரோட விக்கெட்டா இருக்கும்’.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 01, 2019 12:29 AM

இங்கிலாந்து அணியின் முக்கிய விக்கெட்டை எடுத்ததும் விராட் கோலி ஆக்ரோஷமாக கத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

WATCH: Mohammed Shami and Virat Kohli celebrate Eoin Morgan\'s wicket

12 -வது உலகக்கோப்பை தொடரின் 38 -வது போட்டி நேற்று(30.06.2019) பிர்மின்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து 338 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இதில் ரோஹித் ஷர்மா 102 ரன்களும், விராட் கோலி 66 ரன்களும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட்(32), ஹர்திக் பாண்ட்யா(45) மற்றும் தோனி(42) அதிரடியாக விளையாடியும், 50 ஓவர்களில் இந்திய அணியால் 306 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் தோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 34 -வது ஓவரை வீசிய முகமது ஷமியிடம் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷமாக கத்தினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #VIRATKOHLI #INDVENG #TEAMINDIA #VIRALVIDEO