கேட்கவா? இல்ல வேண்டாமா? பரபரப்பாக நடந்த போட்டியில் கோலி செய்த செயல்..! வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 30, 2019 09:43 PM

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ரி-வியூ கேட்பது போல் சைகை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Kohli scares Bairstow over DRS hilariously during IND ENG match

உலகக்கோப்பை லீக் சுற்றின் 38 -வது இன்று(30.06.2019) பிர்ன்மின் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இவர்கள் இருவரது கூட்டணியை பிரிக்க முடியாமல் வெகுநேரமாக இந்திய அணி திணறியது.

இதில் ஜேசன் ராய் 66 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 111 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இதனிடையே இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஜே ரூட்(44) மற்றும் பென் ஸ்டோக்ஸ்(79) கூட்டணி அதிரடியாக ஆட ஆரம்பித்தது. 50 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்களை எடுத்தது.

இப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யா வீசிய ஓவரில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ அடிக்க முயன்று தவறவிட்ட பந்தை தோனி கேட்ச் பிடித்தார். உடனே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அம்பயரிடம் அவுட் என முறையிட்டார். ஆனால் இதனை அம்பயர் நாட் அவுட் என கூறினார். இதனால் கோலி ரி-வியூ கேட்பது போல் சென்று பின்னர் கேட்காமல் தவிர்த்தார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #VIRATKOHLI #INDVENG #TEAMINDIA #VIRALVIDEO #DRS #BAIRSTOW