‘என்ன இப்டி எறங்கிட்டீங்க’.. ‘தல’கிட்ட சரண்டர் ஆகுறத தவிர வேற வழியே இல்ல’.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 03, 2019 11:12 AM

இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டியில் வங்கதேச வீரர் பேட்டிங் செய்யும் போது தடுமாறி கீழே விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: MS Dhoni attempt stumping against bangladesh video goes viral

இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனால் உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி பெற்றுள்ளது.

மேலும் இப்போட்டியில் சதத்தைக் கடந்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, உலகக்கோப்பையில் அதிக சதமடித்த(4) வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்து அசத்தினார். அதேபோல் இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள்(544) அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தும் அசத்தினார். இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினர். இதில், வங்கதேச அணியின் கடைசி இரண்டு விக்கெட்டுகளை ஒரே ஓவரில் கைப்பற்றிய பும்ரா, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்நிலையில் இப்போட்டியின் 2 -வது இன்னிங்ஸில் 41 -வது ஓவரை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால் வீசினார். அந்த ஓவரின் 3 -வது பந்தை சந்தித்த வங்கதேச வீரர் சபீர் ரகுமான் அடிக்க முயற்சித்து பந்தை தவறவிட்டார். அப்போது உடனே பந்தை பிடித்த தோனி ஸ்டம்பிங் செய்ய முயற்சித்தார். இதனால் நிலைதடுமாறி சபீர் கீழே விழுந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI #INDVBAN #TEAMINDIA #VIRALVIDEO