‘யாரென்று புரிகிறதா’.. ஓவல் மைதானத்தை அதிரவைத்த ‘தல’தோனியின் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 09, 2019 10:14 PM

தோனி மைதானத்திற்குள் பேட்டிங் செய்ய வரும் போது ரசிகர்கள் ஆரவாரமாக உற்சாகப்படுத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

WATCH: MS Dhoni\'s entry in the oval of London

உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியா தனது இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்களை எடுத்தது. இதில் தொடக்க ஆட்டகாரர்களான ஷிகர் தவான்(117) சதம் மற்றும் ரோஹித் ஷர்மா(57) அரைசதம் அடுத்து அசத்தினர். இப்போட்டியில் ரோஹித் ஷர்மா அரைசதத்தைக் கடந்ததன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சச்சினுக்கு அடுத்தபடியாக 2000 ரன்களை(37 போட்டிகளில்) கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஹர்த்திக் பாண்ட்யா கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இதில் 48 ரன்கள் அடித்திருந்த போது ஹர்திக் பாண்ட்யா அவுட்டாகினார். இதனை அடுத்து கேல்.எல்.ராகுல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தோனி களமிறங்கினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர். இதில் தோனி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசி 27 ரன்களில் அவுட்டாகினார். இதனைத் தொடர்ந்து 82 ரன்களில் விராட் கோலி அவுட்டாக 50 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 352  ரன்களை இந்தியா எடுத்தது. இதனைத் தொடர்ந்து 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI #INDVAUS #VIRALVIDEO