‘ஒவ்வொரு தடவையும் இப்டியே பண்ணா எப்டி’.. அம்பயரால் கடுப்பான கோலி..! வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 02, 2019 11:31 PM

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அம்பயரின் செயலால் கடுப்பான விராட் கோலியின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

WATCH: Virat Kohli argues with umpires about review

இந்தியா-வங்கதேசத்துக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்களை எடுத்தது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா(104) மற்றும் கே.எல்.ராகுல்(77) சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இப்போட்டியில் சதத்தைக் கடந்ததன் மூலம் உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் ஷர்மா இடம்பிடித்து அசத்தினார். இதனை அடுத்து 315 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியின் 11 -வது ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசினார். அந்த ஓவரின் 2 -வது பந்தை எதிர்கொண்ட வங்கதேச வீரர் சர்காரின் காலில் பந்து பட்டுச் சென்றது. இதனால் எல்.பி.டபுல்.யூ -க்கு விராட் கோலி அம்பயரிடம் அப்பீல் செய்தார். ஆனால் அம்பயர் இது அவுட் இல்லை என தெரிவித்தார். இதனால் உடனே கோலி ரி-வியூ கேட்டார். அதனால் நடுவர்கள் சோதித்துப் பார்த்ததில் பந்து முதலில் கால் பேடில் பட்டு செல்வது போல் இருந்தது. ஆனால் தேர்ட் அம்பயரும் இதனை நாட் அவுட் என அறிவித்ததால் கோலி கடுப்பாகினார். இதனை அடுத்து ஹர்திக் பாண்ட்யா வீசிய ஓவரில் விராட் கோலியின் கையிலேயே கேட்ச் கொடுத்து சர்கார் அவுட்டானார்.

Tags : #ICCWORLDCUP2019 #VIRATKOHLI #INDVBAN #DRS #VIRALVIDEO