“இந்தியாவா, பாகிஸ்தானா எது சிறந்த அணி?” வைரலாகும் பாகிஸ்தான் பாட்டியின் பதில்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 16, 2019 09:40 PM
இந்தியா பாகிஸ்தான் அணிகளில் எது சிறந்தது என்ற கேள்விக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பாட்டி ஒருவர் அளித்துள்ள பதில் தற்போது வைரலாகி வருகிறது.

கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். சில வருடங்களாக இரண்டு அணிகளும் நேரடியாக எந்தப் போட்டிகளிலும் விளையாடுவது இல்லை. ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் குறித்த கேள்விக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பாட்டி ஒருவர் பதில் அளித்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், “எது சிறந்த அணி பாகிஸ்தானா இந்தியாவா? என்ற கேள்விக்கு உடனடியாக இந்தியா” என பதிலளிக்கிறார் அவர்.
கேள்வி கேட்கும் பெண், “பாட்டி நாம் பாகிஸ்தானில் வசிக்கிறோம். பாகிஸ்தான் நமது தேசம்” என்கிறார். அதற்கு அந்தப் பாட்டி, “நாம் இப்போது பாகிஸ்தானில் வசிக்கிறோம். ஆனால் இதற்கு முன்பு இது எல்லாமே இந்தியாதான்” என பதிலளிக்கிறார். இந்த வீடியோவிற்கு பல வகையான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.
Listen to daadi everyone ❤️ #IndiaVsPakistan pic.twitter.com/RCTgxfDYYc
— Naila Inayat नायला इनायत (@nailainayat) June 16, 2019
