'நைட் லேட்டா வந்ததால தப்பிச்சா'... 'ஆனா மொத்த குடும்பமும் போச்சு'... கலங்க வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jul 03, 2019 11:55 AM

மும்பையில் பெய்து வரும் கனமழையால் , 8 வயது சிறுமி தனது மொத்த குடும்பத்தையும் இழந்து நிற்கும் சம்பவம் அனைவரையும் கலங்க செய்துள்ளது.

8-yr-old girl Priya Nanavare loses entire family in Mumbai Rains

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து மும்பையில் கடந்த 5ப நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது . சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இதனிடையே நேற்று அதிகாலை கிழக்கு மலாட் பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். இந்த கோர சம்பவத்தில் 8 வயது வயது சிறுமி பிரியா நானாவரே, தனது மொத்த குடும்பத்தையும் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு பிரியா அன்று இரவு தான் வந்துள்ளார். இதனால் அவர் அதிர்ஷ்டாவசமாக உயிர் தப்பினார்.

ஆனால் பிரியாவின் தந்தை, தாய் மற்றும் சகோதரிகள் ஆகிய அனைவரும் விபத்தில் பலியாயினர். தனது சிறு வயதிலேயே, மொத்த குடும்பத்தையும் பிரியா இழந்து நிற்பது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #MUMBAI #RAIN #MUMBAI RAINS #BMC #PRIYA NANAVARE