‘ஜஸ்ட் மிஸ்’ ஸ்டெம்பிங்கில் இருந்து தப்பிய தோனி..! வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 27, 2019 08:31 PM
தோனி ஸ்டம்பிங்கில் இருந்த தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி இன்று(27.06.2019) மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.
இதில் ரோஹித் சர்மா 18 ரன்கள் எடுத்திருந்த போது கெமர் ரூச் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, கே.எல்.ராகுலுடன் சேர்ந்து நிதானமாக விளையாட ஆரம்பித்தார். இதில் ராகுல் 48 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த விஜய் சங்கரும் 14 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து கேதர் ஜாதவ் 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த தோனி மற்றும் விராட் கோலி கூட்டணி நிதானமாக ஆடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தது. இதில் கோலி 72 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி 46 ரன்களில் அவுட்டாகினார். இப்போட்டியில் இரண்டுமுறை அவுட்டில் இருந்து தப்பிய தோனி 56 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதனை அடுத்து 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 268 ரன்களை எடுத்துள்ளது.
Hope gives hope to Dhoni #INDvWI #cwc19 pic.twitter.com/6wrBQVHgSh
— Shiva (@Shivas_58) June 27, 2019
