‘இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது என எதிர்ப்பு..’ சேவை அறிவிப்பை ரத்து செய்தது இந்தியன் ரயில்வே..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Jun 16, 2019 05:24 PM
இந்தியன் ரயில்வே நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்காக மசாஜ் சேவையை அறிமுகம் செய்யப்போவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பில், “ரயில் பயணத்தின்போது பயணிகளுக்கு தலை மற்றும் பாதங்களுக்கு மட்டும் மசாஜ் செய்யப்படும். இதற்காக ஐ.டி கார்டுடன் 5 மசாஜ் சேவகர்கள் ஒவ்வொரு ரயிலிலும் பணியமர்த்தப்பட உள்ளனர். கோல்டு, டைமண்ட், பிளாட்டினம் என மூன்று வகைகளில் செய்யப்படும் இந்த மசாஜ்களுக்கு 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்” எனக் கூறப்பட்டிருந்தது.
ஆனால் ரயில்வேயின் இந்த முடிவு இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது என பல்வேறு தரப்பிலிருந்தும் தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதன் காரணமாக மசாஜ் சேவை அறிவிப்பை இந்தியன் ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.
