'ரோட்டுல செய்யுற காரியமா இது'... 'அதிர வைத்த இளைஞர்கள்' ... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 10, 2019 02:59 PM

ஓடும் காரில் கண்ணாடியை இறக்கிவிட்டு,கதவின் மீது அமர்ந்தபடி ஆபத்தான பயணம் மேற்கொண்ட இளைஞர்களை காவல்துறையினைர் கைது செய்துள்ளனர்.

3 men arrested for performing stunts on moving car

மும்பையின் கார்டர் சாலை என்பது மிகவும் போக்குவரத்து மிகுந்த முக்கியமான சாலைகளில் ஒன்றாகும்.இந்த சாலையில் கடந்த 7-ம் தேதி காரின் கண்ணாடியை இறக்கி விட்டு விட்டு,இளைஞர்கள் மூன்று பேர் கதவின் மீது அமர்ந்தபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டார்கள்.இதனை அந்த வாகனத்தின் பின்னால் வந்த ஒருவர் வீடியோ எடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து வீடியோவை அடிப்படையாக வைத்து,காரில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட மூன்று இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.இதனிடையே இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மும்பை காவல்துறை இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Tags : #MUMBAI #MUMBAI POLICE #CARTER ROAD MUMBAI #STUNT #MOVING CAR