‘என்ன பாண்ட்யா இப்டி பண்ணிட்ட’.. கேப்டனுக்கே இந்த நிலைமையா!.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 17, 2019 07:25 PM
பாகிஸ்தான் எதிரான போட்டியின் போது பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதை பாண்ட்யா கிண்டல் செய்யும் விதமாக பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பை லீக் சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய பல்வேறு சாதனைகளை குவித்துள்ளது. அதில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 140 ரன்கள் அடித்து அசத்தினார். இப்போட்டியில் அவர் 3 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
அதேபோல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இப்போட்டியில் 77 ரன்கள் விளாசினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை கடந்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். மேலும் தமிழக வீரரான விஜய் சங்கர் உலகக்கோப்பையில், தான் வீசிய முதல் பந்தில் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார்.
இப்போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது பேட்டிங் செய்த போது ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தை இறங்கி வந்து அடிக்க முயற்சித்தார். ஆனால் அது பௌன்சராக வந்ததால் அவரால் பெரிய ஷாட் ஏதும் அடிக்க முடியவில்லை. அப்போது அவரை கிண்டல் செய்யும் விதமாக ஹர்திக் பாண்ட்யா பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
— Cricket Freak (@Jammy_Cricket11) June 16, 2019
