‘இங்க மட்டுமில்ல இங்கிலாந்துலையும் நம்ம விசில் சத்தம்தான்’.. மரண மாஸ் காட்டிய சிஎஸ்கே ரசிகர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 22, 2019 06:56 PM

உலகக்கோப்பையில் தோனி மைதானத்துக்கு வரும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவர் ‘தல’ என கூறி உற்சாகமாக வரவேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: CSK fan celebrate MS Dhoni\'s entry during IND vs AFG match

இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தானுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் சுற்று இன்று(22.06.2019) சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர்.

இதில் ரோஹித் சர்மா 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் ராகுல் 30 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த விஜய் சங்கருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி அதிரடியாக ஆட ஆரம்பித்தார். ஆனால் மறுமுனையில் விளையாடிய விஜய் சங்கர் 29 ரன்கள் எடுத்திருந்த போது எல்.பி.டபுல்யூ -வில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய தோனி 28 ரன்களிலும், விராட் கோலி 67 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனைத் தொடர்ந்து வந்த கேதர் ஜாதவ் 52 ரன்களில் அவுட்டாக, கடைசியாக 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது.

இப்போட்டியில் இந்திய வீரர்கள் மைதானத்துக்குள் வரும் போது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர் தோனியைப் பார்த்து ‘தல’ என உற்சாகமாக கூறி வரவேற்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI #CSK #INDVAFG #VIRALVIDEO