இந்த தடவ ‘தல’ எடுத்த வேறலெவல் ஸ்டம்பிங்..! மிரண்டு போன இலங்கை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 06, 2019 07:20 PM

இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனி ஸ்டம்பிங் செய்து அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: MS Dhoni excellent stumping against Sri Lanka video goes viral

இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டி இன்று(06.07.2019) ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதி்ல் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனை அடுத்து கடைசியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மேத்யூஸ் 113 ரன்களும், திரிமன்னே 53 ரன்களும் எடுத்தனர்.

இப்போட்டியின் 11 -வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா வீசினார். அந்த ஓவரின் 4 -வது பந்தை இலங்கை அணி வீரர் குஷல் மெண்டீஸ் இறங்கி வந்து அடிக்க முயற்சித்து தவறவிட்டார். உடனே விக்கெட் கீப்பர் தோனி எளிதாக ஸ்டம்பிங் செய்து அசத்தினார். இப்போட்டியில் முதல் 3 விக்கெட்டுகளை தோனி கேட்ச் பிடித்து அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI #RAVINDRA JADEJA #HARDIKPANDYA #CWC19 #SLVIND #TEAMINDIA #HAPPYBIRTHDAYDHONI