‘மறுபடியும் பெண் குழந்தையா..!’.. பிறந்து 2 நாளே ஆன ‘பச்சிளம்குழந்தை’.. பெற்ற தாய் செய்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 18, 2020 09:48 AM

இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Upset over not having son mother kills newborn daughter

மத்திய பிரதேசம் மாநிலம் ஷஜாபூர்  மாவட்டத்தில் உள்ள அம்ஹோரியா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு (26). இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான மஞ்சுவுக்கு கடந்த புதன்கிழமை (12.02.2020) மருத்துவமனையில் மறுபடியும் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்த்த மஞ்சுவுக்கு பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி அடைந்துள்ளார்.

இதனை அடுத்து மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் வீட்டுக்கு வந்த மஞ்சு கடந்த வெள்ளிக்கிழமை (14.02.2020), பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் தலை மற்றும் வயிற்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதனால் வலியில் குழந்தை அலறி துடித்துள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தலையில் பலத்தக்காயமடைந்த பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தாய் மஞ்சுவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆண் குழந்தை பிறக்காத விரக்தியில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #MOTHER #NEWBORN #DIES #DAUGHTER #MADHYAPRADESH