என்ன மட்டும் இல்ல, அவங்க ரெண்டு பேரையும் கூட 'அப்படி' பண்ணினாங்க...! 'விஷயம் வெளிய போச்சுன்னா கொன்னுடுவேன்...' பதற வைக்கும் பாலியல் வன்கொடுமை... !
முகப்பு > செய்திகள் > தமிழகம்விருதுநகர் மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கும்பல் மூன்று குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவரம் வெளியே வந்து அப்பகுதியினரை கொந்தளிக்க செய்துள்ளது.

பாலியல் வன்கொடுமை தற்போது அதிகமாக குழந்தைகளின் மீது அரங்கேறி வருகிறது. குழந்தைகள் வெளியே சொல்லமாட்டார்கள் என்ற தைரியத்தில் கொடூர மனம் படைத்தவர்கள் இதை செய்து வரும் நிலையில் ஒரு சிறுவனின் வாக்குமூலத்தால் 5 பேர் கொண்ட கும்பல் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நல கோளாறால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவன் ஒருவித பதட்டத்துடன் காணப்படவே மருத்துவர்களும், பெற்றோரும் அவனை எதனால் இப்படி இருக்கிறாய் என விசாரித்தனர். அப்போது அவன் சொன்ன விஷயம் அங்கிருந்த அனைவரையும் உலுக்கியது.
சிறுவன் வசித்து வரும் அதே கிராமத்தை சேர்ந்த 5 பேர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டனர் எனவும், இதை உன் அப்பா அம்மா யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சிறுவனை மிரட்டியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் தன்னை போலவே மேலும் 2 சிறுமிகளுக்கும் இதே போல் பாலியல் சீண்டல்கள் செய்து வருவதாக அவன் சொன்ன செய்தி அங்குள்ளவர்களை கொலைநடுங்க செய்தது.
சிறிதும் தாமதப்படுத்தாமல் சிறுவனின் பெற்றோர், அந்த இரண்டு சிறுமிகளின் பெற்றோர்களை அழைத்து தகவல் சொல்லி உள்ளனர். சிறுமியின் பெற்றோர்கள் அவர்களை விசாரித்த போது அச்சிறுமிகளும் கடந்த சில மாதங்களாக இது நடப்பதையும், அவர்கள் விடுத்த கொலை மிரட்டல்கள் பற்றியும் சொல்லியுள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அனைவரும் சேர்ந்து, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் வெள்ளைச்சாமி, கணேசன், இரணவீரன், ராதாகிருஷ்ணன், திருவன், ஆகிய 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் 5 பேரும் கடந்த 2 மாதங்களாக 2 சிறுமிகளையும் 1 சிறுவனையும் பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, 5 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் அந்த கொடூரர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் சிறுவனுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
