'புதுமாப்பிள்ளை தலையில்'.. 'சுத்தியலால் அடித்து, சிதைத்து'..4 வீடியோக்களில் ரெக்கார்டு செய்த நபர்.. மிரட்டும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 01, 2019 02:20 PM

உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர் நகரில் 25 வயது நபர் ஒருவர் தலை சிதறி கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெருத்த அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

murderer killed newly married youth and recorded in 4 clips

சபால் கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ் என்பவர், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி காணாமல் போனதை அடுத்து அவரது குடும்பத்தினர் பதற்றமாகி, பின்னர் போலீஸாரிடத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் ராஜீவைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர் நகருக்கு உட்பட்ட பகுதியில் தலை சிதைக்கப்பட்டு கொடூரமாக ராஜீவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலையைச் செய்த நபர் ஆர்யகாந்த் என்றும் அவர் ராஜீவின் தலையில் சுத்தியலால் அடித்து செய்த இந்த கொலையை 4 வீடியோ க்ளிப்புகளில் பதிவு செய்துள்ளதாகவும், அந்த வீடியோவை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகி 20 நாளே ஆன நிலையில், 25 வயது நிரம்பிய ராஜீவை கொன்றுவிட்டு தலைமறைவாகியிருக்கும் ஆர்யகாந்தை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Tags : #YOUTH #NEWLYMARRIED #UTTARPRADESH