'இந்த விசயத்துல'.. 'நான் சொல்ற மாதிரி பண்ணுங்க!'.. ஹிட் அடிக்கும் சச்சினின் யோசனை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Nov 05, 2019 04:52 PM

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி பற்றி கூறியுள்ள யோசனை கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ODI should consist of 4 innings of 25 overs each, Sachin

50 ஓவர் கிரிக்கெட் போட்டியை உற்சாகமாப் பார்த்த ரசிர்கள் ஒரு காலத்தில் இருந்தனர். ஆனால் தற்போது டி20 கிரிக்கெட் போட்டிகளே பெருமளவில் அனைவரின் விருப்பப் போட்டியாக உள்ளது. இதனால் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி மரபு காணாமலே போய்விடும் போலிருக்கிறது.

இந்த சூழ்நிலையில்தான் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியை 4 இன்னிங்ஸ்களாக பிரித்து விளையாடலாமே? என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார். அதாவது 50 ஓவர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 4 இன்னிங்ஸ்களாக பிரித்து ஒவ்வொரு இன்னிங்ஸிலும் தலா 25 ஓவர்களை வைக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இதன்படி டாஸ் வென்ற அணி, 25 ஓவர்கள் கொண்ட முதல் இன்னிங்சை ஆடத் தொடங்க வேண்டும் என்றும், அதனையடுத்து எதிரணி விளையாட வேண்டும் என்றும் சச்சின் கூறியுள்ளார். இதேபோல் 2-வது இன்னிங்சை இரண்டு அணிகளும் விளையாடலாம் என்றும், முதல் 5 ஓவர்களுக்கு கட்டாயம் பவர் ப்ளே அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

Tags : #CRICKET #ODI #SACHINTENDULKAR