‘தீபாவளி அதிரடி ஆஃபர்’ அமேசானின் அடுத்த தள்ளுபடி விற்பனை..! விவரம் உள்ளே..!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Selvakumar | Oct 11, 2019 12:50 PM

விழாக்கால விற்பனையாக அமேசான் மீண்டும் தள்ளுபடி விற்பனையை தொடங்க உள்ளது.

Amazon announces Great Indian Festival Celebration Special sale

அமேசானின் தீபாவளி சிறப்பு விற்பனையான ‘சிறப்பு கொண்டாட்டம்’ வரும் அக்டோபர் 13 -ம் முதல் 17 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு வரும் அக்டோபர் 12 -ம் தேதி நண்பகல் 12 மணி முதலே தொடங்க உள்ளது. முன்னதாக நடந்து முடிந்த பிக் பில்லியன் டே போலவே ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அதிகப்படியான சலுகை அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஐசிஐசிஐ வங்கி க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வட்டியில்லா தவணை முறை மற்றும் எக்ஸ்சேஞ்ச் போன்ற ஆஃபர்களும் வழங்கப்பட உள்ளன. இந்த விற்பனையில் ரெட்மி 7 சீரிஸ், சாம்சன்ங் கேலக்ஸி M30, ஒன்ப்ளஸ் 7, ஐபோன் XR போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி கொடுக்கப்பட உள்ளன. குறிப்பாக கேமிரா சார்ந்த சாதனங்களுக்கு நல்ல தள்ளுபடி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : #AMAZON #AMAZONGREATINDIANFESTIVAL #DIWALI2019