"அட, இந்த ஐடியா கூட நல்லா இருக்கே...?" ஊரடங்க பக்காவாக யூஸ் பண்ற இந்த மாநிலத்த... மத்தவங்களும் பின்பற்றலாமே?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 09, 2020 08:24 PM

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ளது. மத்திய அரசு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்னும் சில நாட்களில் முடியும் தருவாயில் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பாடில்லை. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

Telungana govt makes an wonderful idea in this lockdown

இந்நிலையில், ஊரடங்கின் காரணமாக சாலைகள் காலியாகவுள்ள நிலையில், இதனை சிறந்த முறையில் பயன்படுத்த தெலுங்கானா அரசு சிறப்பான வேலையில் ஈடுபட்டு வருகிறது. சாலைகளில் வாகனங்கள் எதுவும் அதிகம் செல்லாத இந்த நேரத்தில், ஹைதராபாத் பகுதியிலுள்ள பிராதன சாலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அது மட்டுமில்லாது, மேம்பாலங்களில் பணிகளையும் இந்த சமயத்தை பயன்படுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு நேரத்தை சிறப்பாக பயன்படுத்தியுள்ள தெலுங்கானாவின் ஐடியாவை மற்ற மாநிலங்களும் பின்பற்றலாம் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.