'காசு போனா திரும்ப வரும், உயிர் போனா'?...'மோடிஜி இத பண்ணுங்க'... சந்திரசேகர ராவ் அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 07, 2020 12:00 PM

காசு போனால் சம்பாதித்து கொள்ளலாம், ஆனால் உயிர் போனால் திரும்ப வராது, எனவே கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார்.

Chandrasekhar Rao asks  Modi to extend lockdown to check coronavirus

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று மட்டும் ஒரே நாளில் 704 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலங்கானாவை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 320-ஐத் தாண்டியுள்ளது. மேலும் தீவிர சிகிச்சை பெற்று வந்த 7 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை சந்திரசேகர ராவ் வலியுறுத்திதயுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் சரிந்தால் அதை மீட்டுவிடலாம். இழந்த பணத்தை கூட சம்பாதித்து கொள்ளலாம். ஆனால் உயிர் போனால் திரும்பி வராது. எனவே கொரோனாவை ஒழிக்க ஒரே ஆயுதம் ஊரடங்கு மட்டுமே. பொருளாதாரத்தில் வலுவாக உள்ள இங்கிலாந்தே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. எனவே நாடு முழுவதும்  ஏப்ரல் 14-க்குப் பின்னரும் ஊரடங்கு தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே தெலங்கானாவில் ஜூன் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 15க்கு பிறகு இரண்டு வாரம் ஊரடங்கை நீட்டிக்கலாம் என, தான் கருத்து மட்டுமே தெரிவித்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.