'கொரோனா' வைரஸ் ஒருவரது உடலில்... 'எத்தனை' நாட்கள் இருக்கும்?... 'புதிய' தகவலை வெளியிட்ட 'சீன' மருத்துவர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதும் வேகமாகப் பெருகிவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வெகு வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இந்த நோயால் உலகம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் மால்கள், பப்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் இணைந்து மக்களுக்கான விழிப்புணர்வு தகவல்களை வெளியிட்டு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரைத் தாக்கினால் அவரது உடலில் அது எவ்வளவு நாட்கள் இருக்கும்? என்பது குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஒருவரை கொரோனா பாதித்தால் அவரிடம் குறைந்தபட்சம் 37 நாட்கள் அது வீரியத்துடன் இருக்கும் என்று சீன டாக்டர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
20 நாட்களுக்கு பிறகுதான் அதன் அறிகுறி தெரியும். அதன் பிறகு 20 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சீன மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த காய்ச்சலில் இருந்து மீண்டு வர சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
அதேபோல அதை குணப்படுத்திய பிறகும் சில நாட்களுக்கு அதன் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2 வாரங்களுக்கு கண்டிப்பாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது உலகம் முழுக்க மருத்துவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
