வீண் 'வதந்திகள' நம்பாதீங்க.... இந்தியாவுல கொரோனாவோட 'உண்மை' நிலவரத்த... 'இங்க' போய் தெரிஞ்சுக்கங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 19, 2020 01:27 AM

இந்தியாவில் பரவும் கொரோனாவை விட அதுகுறித்த வதந்திகள் வேகமாக மக்கள் மத்தியில் சென்றடைகின்றன. சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் இவற்றை கட்டுப்படுத்துவது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. தேவையற்ற வதந்திகளால் ஆங்காங்கே உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

Coronavirus: India\'s First COVID-19 Situation Dashboard

இந்த நிலையில் தேவையற்ற வதந்திகளை தடுக்கும் பொருட்டு கிப்ரோஷ்( Kiprosh) என்னும் சாப்ட்வேர் நிறுவனம், கொரோனா குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில் டேஷ்போர்டு ஒன்றினை உருவாக்கி உள்ளது. இதில் இந்திய மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை, இந்தியர்கள் எத்தனை பேர்? வெளிநாட்டவர்கள் எவ்வளவு பேர்  உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று உள்ளன.

கொரோனா குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்கள், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகம், முன்னணி செய்தி நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து எடுத்து, அவற்றை சரிபார்த்து கிப்ரோஷ் நிறுவனம் இந்த டேஷ்போர்டில் அப்டேட் செய்கிறது. தேவையில்லாத வதந்தியை தடுக்கும் பொருட்டு இந்த டேஷ்போர்டை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Dashboard Link: https://covidout.in/