வீடியோ: இதுதான் உண்மையான 'கும்மாங்குத்து திருவிழா'... '2000 பேர்'... '20 நிமிடம்'.... '100' பேர் 'மண்டை' உடைந்தது....
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலங்கானா மாநிலத்தில் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற திருவிழாவில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் சுமார் 100 பேர் மண்டை உடைந்தது.
ஹோலி பண்டியையொட்டி ஆண்டுதோறும் நிஜாமாபாத் மாவட்டம் ஹன்சா கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இந்தத் திருவிழா நடைபெறுவது வழக்கம். பல்வேறு ஜாதியினரும் பங்கேற்கும் இத்திருவிழாவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்த பின்னர் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் கும்மாங்குத்து குத்திக் கொள்ளும் இந்த நிகழ்ச்சி அரங்கேறுகிறது.
இந்த விழாவுக்கு காவல்துறை அனுமதி மறுத்த போதும் அதனையும் மீறி இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுதான் வருகிறது. நடுவில் கயிறு ஒன்றை கட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருபிரிவாக பிரிகின்றனர். அதன் பிறகு ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொள்கின்றனர். 20 நிமிடங்களே அரங்கேறிய இந்த சண்டையில் சுமார் 100 பேருக்கு மண்டை உடைந்தது.
பலருக்கு ரத்த காயம் ஏற்பட்ட போதும் அதைக் கண்டுகொள்ளாத அவர்கள் ஆஞ்சநேயர் கோயில் அக்னிகுண்டத்து சாம்பலை அள்ளி தங்கள் காயத்தின் மீது பூசிக் கொண்டனர். தங்கள் கிராமத்திற்கு எந்த கெடுதலும் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த திருவிழாவை கொண்டாடுவதாக விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.