சிதைந்த ‘முகம்’... ‘நிர்வாண’ சடலம்... இளம்பெண்ணுக்கு நேர்ந்த நெஞ்சை ‘உலுக்கும்’ சம்பவம்!...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 17, 2020 07:57 PM

தெலுங்கானாவில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Telangana Womans Naked Body Found Face Smashed Hands Tied

தெலுங்கானாவில் கடந்த ஆண்டு பெண் மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் அதே மாவட்டத்தில் உள்ள பாலம் ஒன்றுக்கு அடியில் இளம்பெண் ஒருவருடைய சடலம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ரங்காரெட்டி மாவட்டத்திலுள்ள செவெல்லா பாலத்துக்கு அடியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவருடைய சடலம் கிடப்பதாக இன்று காலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம் ஆடைகள் ஏதுமின்றி, முகம் சிதைக்கப்பட்ட நிலையில், கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசியுள்ள போலீசார், “கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 20 வயது முதல் 30 வரை இருக்கலாம். அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்தப் பெண்ணின் முகம் அடையாளம் தெரியாதபடி சிதைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே முழு விவரமும் தெரிய வரும்” எனக் கூறியுள்ளனர்.