VIDEO: 'மோடியைப் பின்பற்றினால்... ஓடிப்போகும் கரோனா!'... தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் கொரோனா விழிப்புணர்வு கவிதை!... வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தெலங்கானா மாநில ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனின் கொரோனா விழிப்புணர்வு கவிதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவை மட்டுமல்லாது உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்கவைத்துள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகளும் லாக் டவுன் பிறப்பித்து, தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து, இந்தியாவின் பல பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தின் முன்னாள் பாஜக மாநில தலைவரும், தற்போதைய தெலங்கானா மாநிலத்தின் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன்,
கொரோனா வைரஸ் குறித்து பேசிய விழிப்புணர்வு கவிதை இணையத்தில் வேகமாகப் பரவுகிறது.
