கொரோனாவால் ‘மணமகன்’ ஊர் திரும்பாததால்... குடும்பத்தினர் எடுத்த ‘முடிவு’... ‘வியப்பில்’ ஆழ்த்தும் ‘திருமணம்!’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 17, 2020 09:07 PM

தெலுங்கானாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபெற்ற ஆன்லைன் திருமணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Telangana Corona Scare Forces Marriage Formalities To Go Online

தெலுங்கானா மாநிலம் கோட்டங்குடம் பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல் நபி என்பவருடைய மகளுக்கும், சவுதி அரேபியாவில் வேலை செய்துவரும் முஹம்மது அத்னான் கான் என்பவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளால் சவுதி அரேபியாவிலுள்ள மணமகனால் ஊருக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து திருமணத்தை குறித்த நாளிலேயே நடத்த வேண்டுமென முடிவெடுத்த இரு வீட்டாரும் வீடியோ கால் வழியாக நிக்காஹ்வை நடத்தியிருக்கின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த திருமணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #TELANGANA #CORONAVIRUS #MARRIAGE #BRIDE #GROOM #ONLINE