'நான் விளையாட்டா தான் செஞ்சேன்'?... 'வீடியோ'வால் ஆடிப்போன அதிகாரிகள்'... 'பட்' அடித்தது ஜாக்பாட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Mar 10, 2020 05:43 PM

காவல் நிலையத்தில் விளையாட்டாக எடுத்த வீடியோவால், பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பெண் காவலருக்கு தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது.

Suspended lady cop is now a star in Gujarati video albums

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள லங்நாஜ் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் அல்பிதா சவுத்ரி, பணி நேரத்தில் காவல்நிலையத்தில் இருக்கும்போது டிக்டாக்கில் நடனமாடி வீடியோ எடுத்துள்ளார். அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிட, அந்த வீடியோ வைரலாகியது. அதே நேரத்தில் பணி நேரத்தில் காவலர் இப்படி நடந்து கொள்ளலாமா என பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த விவகாரம் உயரதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதுகுறித்து விசாரித்த துணை போலீஸ் சூப்பிரண்டு மஞ்சிதா வன்சாரா, பெண் காவலர் விதிகளை மீறி காவல் நிலையத்திலேயே டிக்டாக் வீடியோ எடுத்ததால் அல்பிதாவை  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை சற்றும் எதிர்பாராத அவர், அதிர்ச்சியில் உறைந்து போனார். தான் விளையாட்டாக செய்த செயல் தனக்கே வினையாக மாறியதே என நொந்து போன அவர்,  ' TikTok ni deewani ' என்ற தலைப்பில் ஆல்பம் வெளியிட்டார். அதோடு  இரண்டு பாடல்களை சொந்தமாக பாடி, வீடியோ ஆல்பத்தில் குஜராத் நடிகருடன் சேர்ந்தும் நடித்தார்.

இந்த சூழ்நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் தற்போது குவிய தொடங்கியுள்ளது. இது அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதோடு  சில நிபந்தனைகளுடன் காடி காவல் நிலையத்தில் மீண்டும்  அல்பிதா பணியமர்த்தப்பட்டுள்ளார். அல்பிதா பணி நிமித்தமாக வெளியில் செல்லும் போது பலரும் அவருடன் வந்து செல்ஃபி எடுத்து கொள்கிறார்கள். இந்நிலையில் என்னுடைய உயர் அதிகாரிகள் அனுமதித்தால் நான் நிச்சயம் சினிமாவில் நடிப்பேன் என, அல்பிதா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Tags : #POLICE #TIKTOK #LADY COP #GUJARATI #VIDEO ALBUMS