ஒரு நீதிபதி செய்ற வேலையா இது... டபுள் மீனிங்ல... அசிங்க அசிங்கமா... நீதிபதிக்கு குட்டு வைத்த சுப்ரிம் கோர்ட்....

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Feb 28, 2020 02:16 PM

பெண்களை ஆபாசமாக திட்டிய வழக்கில் நீதிபதிக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிசெய்த உச்சநீதிமன்றம் அவரை கட்டாய ஓய்வில் அனுப்பும்படி உத்தரவிட்டது.

Supreme Court upholds compulsory retirement of judicial officer

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோட்டாவில் முதன்மை நீதிபதியாக பதவி வகித்தவர் அருண்குமார் குப்தா. இவர் இந்த பதவிக்கு வருவதற்கு முன்பு ராஞ்சியில் உள்ள நிர்வாக அதிகாரி பயிற்சி மையத்தில் சிவில் சர்வீசில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார்.

இந்த நேரத்தில் அவர் பெண் பயிற்சியாளர்களை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாகக் கூறப்படுகிறது. யாரும் பயன்படுத்த முடியாத மிகவும் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியும், இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை பயன்படுத்தியும் அவர் திட்டி வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. பயிற்சி மாணவிகள் வேறு வழியில்லாம் இதை பொறுத்துக் கொண்டுள்ளனர்.

ஒரு தடவை ஆடைகளுக்கு இஸ்திரி போடுபவர் சரியாக துணியை அயர்ன் செய்யவில்லை என்ற காரணத்தினால் அவரது தலையில் சூடான இஸ்திரி பெட்டியை வைத்ததாகவும் புகார் கூறப்பட்டது.

இதன்பிறகு அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு நீதிபதி ஆனார்.  இந்த நிலையில், ஆபாசமாக திட்டியது தொடர்பாக பெண்கள் 10 பேர் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து அருண்குமார் குப்தா உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், தீபக்குப்தா ஆகியோர் ஐகோர்ட்டு உத்தரவை உறுதி செய்து நீதிபதியை கட்டாய ஓய்வில் அனுப்பும்படி உத்தரவிட்டனர்.

Tags : #JHARKHAND #JUDICIAL OFFICER #SUPREMECOURT #COMPULSORY RETIREMENT #DELHI