"வாந்தி எடுத்தது ஒரு குத்தமாய்யா..." 'விமானத்தை' 3 மணி நேரமாக கழுவிய ஊழியர்கள்... 'கொரோனா' பீதியில் சக 'பயணிகள்'...
முகப்பு > செய்திகள் > உலகம்டெல்லியிலிருந்து புனே வரை சென்ற விமானத்தில் சக சீன பயணி ஒருவர் உடல்நலக் குறைவால் வாந்தி எடுத்ததையடுத்து, கொரோனா பீதியால் சக பயணிகள் பீதியில் ஆழ்ந்தனர்.

31 வயது கொண்ட சீன நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் டெல்லியில் இருந்து புனே சென்றுள்ளார். உடல்நலக்குறைவாக இருந்த அவர், வாந்தி வருவதுபோல் இருந்ததாக விமான ஊழியர்களிடம் கூறியுள்ளார். விமானத்திலேயே இரண்டு முறை வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, புனேவில் விமானம் தரையிறங்கியதும், அந்த சீன பயணியை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதை கண்ட சக பயணிகள் கொரோனா வைரஸ் பீதியில் ஆழ்ந்தனர். அதேசமயம், அந்த விமானத்தை நன்கு சுத்தம் செய்த பின்னர் 3 மணி நேரம் தாமதமாக டெல்லி புறப்பட்டு சென்றது.
முன்னதாக, அந்த பயணி, சீனாவில் இருந்து கொல்கத்தாவுக்கு கடந்த ஜனவரி 29 ஆம் தேதி வந்துள்ளார் என்றும் நேற்றுதான் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் ஆகையால் இது கொரோனா பாதிப்பாக இருக்க வாய்ப்பில்லை என்றும் விமான ஊழியர்கள் தெரிவித்தனர்.
