‘40 நிமிஷம் சுத்தி நின்னுகிட்டு..’.. பல்கலை., விழாவில் புகுந்து இளம் பெண்களுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த நபர்கள்! - பரபரப்பு குற்றச்சாட்டு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Feb 10, 2020 09:01 AM

டெல்லி பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட கார்கி கல்லூரியில் நிகழ்ந்த ஆண்டு விழா கலாச்சார நிகழ்ச்சியின்போது திடீரென, இரும்பு கேட்டைத் தாண்டி சிலர் உள்நுழைந்து, மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அதிர வைத்துள்ளது.

delhi university girls allege molestation during college fest

டெல்லி பல்கலைக் கழகத்தினுள் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென குடிபோதையில் அந்த கேம்பஸினுள் நுழைந்துவிட்ட 5,6 நபர்கள் மாணவிகளை பாலியல் ரீதியாக சீண்டியதாகவும், குறிப்பாக முதலாம் வருட மாணவி ஒருவரைச் சுற்றி நின்றுகொண்டு அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் மாணவிகள் ஊடகங்கள் வாயிலாகவும், போலீஸாரிடமும் தெரிவித்துள்ளனர்.

வந்தவர்களுக்கு 30-35 வயது இருக்கலாம் என்றும் கிட்டத்தட்ட 40 நிமிடம் அவர்கள் இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், தெரிவித்துள்ள மாணவிகள், இந்த வாலிபர்கள் அந்த கல்லூரியில் பயிலுபவர்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். தவிர, பாதிக்கப்பட்ட மாணவிகளுள் முதலாம் வருட மாணவி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் இன்று போராட்டம் நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அங்குள்ள சிசிடிவி கேமராக்களைக் கொண்டு போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #COLLEGESTUDENTS #DELHI #UNIVERSITY #ABUSE