‘நள்ளிரவில் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த பயங்கரம்’.. மெட்ரோ சிட்டியை நடுங்க வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Feb 08, 2020 08:11 AM

டெல்லியில் இன்று சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

unknown man shoots to death woman SI outside metro station

டெல்லியின் பத்பர்கஞ்ச் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பிரீத்தி. இவர் நேற்றிரவு டெல்லியில் உள்ள ரோகினி என்கிற பகுதியில் இருக்கும் மெட்ரோ நிலையத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ப்ரீத்தியின் தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளதாக காவல்துறையில் தரப்பினர் குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாகக் கிடந்த ப்ரீத்தியின் பிரேதத்தை தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட விவரங்களை வைத்து, இந்த கொலைச் சம்பவம் பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #DELHI #MURDER