'222 கிலோமீட்டர்' வேகத்தில் 'ரன்வேயில்' சென்ற 'விமானம்'... திடீரென எதிரே வந்த 'ஜீப்'... பதறிப் போன 'விமானி'... நொடியில் நிகழ்ந்த 'விபரீதம்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாபுனே விமான நிலையத்தில்,விமானம் ஒன்று 222 கிலோமீட்டர் வேகத்தில் ரன்வேயில் சென்ற போது எதிரே ஜீப் ஒன்று வந்ததால், விமானிகள் விமானத்தை முன்கூட்டியே டேக் ஆஃப் செய்தனர். இதில் விமானத்தின் பின்பகுதி ரன்வேயில் உரசியபடி தீப்பொறி பறக்க சென்ற காட்சி விமான நிலைய அதிகாரிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இன்று காலை 7.30 மணியளவில் புனேவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுவதற்காக ஏர் இந்தியாவின் ஏ321 விமானம் தயாராக இருந்தது. விமானம் அனுமதி பெற்ற பின்னர் ரன் வேயில் 222 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடியது. அப்போது எதிர்பாராதவிதமாக ரன்வேயில் எதிரே ஜீப் ஒன்று வந்துள்ளது. மேலும் மர்மநபர் ஒருவரும் ரன்வேயில் நின்றுகொண்டிருந்தார். பதறிப்போன விமானி அவசர அவசரமாக விமானத்தை டேக் ஆஃப் செய்தார். முழுமையாக ரன்வேயில் விமானம் ஓடாமல் முன்னதாகவே டேக் ஆஃப் செய்ததால் விமானத்தின் பின்பகுதி ரன்வேயில் உரசியபடி தீப்பொறி பறக்க சென்றது. இதனால் விமானத்தின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது.
விமானத்திற்கு என்ன ஆனதோ என விமான நிலைய அதிகாரிகள் பதறிப்போயினர். இருப்பினும் விமானம் தொடர்ந்து பறந்து காலை 10.15 மணியளவில் டெல்லியில் பத்திரமாக தரையிறங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரை (சிவிஆர்) விமானத்தில் இருந்து எடுத்து ஆய்வுக்கு அனுப்பும் படி ஏர் இந்தியா நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.