‘கல்லூரி மாணவிகள் மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கு’.. அதிரடியாக கைது செய்யப்பட்ட 10 இளைஞர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Feb 13, 2020 01:15 PM

டெல்லியில் மகளிர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் ஊடுருவிய ஐந்தாறு இளைஞர்கள் கொண்ட கும்பல் ஒன்று, அங்கு பயிலும் மாணவிகளை மானபங்கப்படுத்தியதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

10 youths arrested in Delhi university molestation case

கடந்த 6-ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில், டெல்லியைச் சேர்ந்த பிரபல பல்கலைக்கழத்துக்குட்பட்ட கல்லூரி ஆண்டு விழா நிகழ்வில் சுவர் ஏறி குதித்து உள்நுழைந்த இளைஞர்கள் சிலர், முதலாம் ஆண்டு மாணவிகள் தொடங்கி பல மாணவிகளை மானபங்கப் படுத்தியதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை அடுத்து சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றைக் கொண்டு போலீஸார் விசாரித்ததில், இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட 10 இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : #DELHI