'டெல்லியில் திடீரென வன்முறை!'... காவலர் உயிரிழப்பால்... தலைநகரில் பதற்றம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Feb 24, 2020 06:27 PM

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் தலைமைக் காவலர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

riots in caa protest in delhi killed a head constable

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மற்றும் எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, இந்த இரு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் விளைவாக, டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வன்முறையில் தலைமைக் காவலர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இன்று இந்தியா வந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, டெல்லியின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர போலீஸ் அதிகாரிகளுக்கு துணை நிலை ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags : #PROTEST #DELHI #CAA