'டெல்லிக்கு அடுத்து'... 'நம்ம ஊரு சென்னை தான்'... 'இதுல 2-வது இடத்துல இருக்கு'... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 11, 2020 10:47 PM

டெல்லியை மிஞ்சும் அளவுக்கு நம்ம ஊரு சென்னை அபாயகரமான சூழ்நிலையில் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

Chennai : Air Pollution Increased by Vehicles After Delhi

பெருகி வரும் மக்கள் தொகையில், நாளுக்கு நாள் வாகனங்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.  இந்நிலையில், இந்தியாவில் டெல்லிக்கு அடுத்தபடியாக, வாகனங்களால் காற்று மாசு ஏற்படும் நகரங்களின் பட்டியலில் சென்னை தான் உள்ளது. சென்னையில் ஒவ்வொரு நாளும் வாகனங்களால் 3,200 டன்கள் கார்பன் டை ஆக்ஸைடு (CO2) உற்பத்தியாவதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையத்தின் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆய்வு முடிவில், கார்பன் டை ஆக்ஸைடு மட்டுமல்லாமல், சென்னையில் நாள்தோறும் 1000 கிலோ கிராம் அளவுக்கு காற்றில் மாசு கலப்பதாகவும், 12,000 கிலோ கிராம் அளவுக்கு நைட்ரோஜன் டை ஆக்ஸைட் கலப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே டெல்லியில் கடந்த முறை காற்று மாசுவால் வெளியே வர முடியாத அளவிற்கு பாதிப்பு உண்டானபோதும், சென்னையில் காற்று மாசு அதிகிரித்து காணப்பட்டது. கடந்த போகிப் பண்டிகையின்போதும் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது . தற்போது சென்னையில் காற்று மாசு அதிகரித்து காணப்படுவது, பெரியவர்கள், குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

Tags : #AIRPOLLUTION #CHENNAI #DELHI #VEHICLES #RESEARCH