‘பெண்கள் மட்டுமில்ல இனி இவங்களும் மெட்ரோல இலவசமா போகலாம்’.. கலக்கப் போகும் மாநில அரசு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 05, 2019 12:22 PM

டெல்லியில் பெண்களை அடுத்து மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களும் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

Students and Senior citizens may also get to free metro rides Delhi

கடந்த மாதம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பெண்கள் இலவசமாக மெட்ரோ மற்றும் பேருந்தில் பயணம் செய்வது தொடர்பான திட்டம் ஒன்றை அறிவித்தார். இந்த திட்டம்  பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் பெண்களை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களும்(senior citizens) மெட்ரோவில் இலவசமாக பயணம் செய்வது குறித்து டெல்லி அரசு ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பெண்களுக்கு இலவச மெட்ரோ பயணம் தொடர்பாக எந்த விதமான பரிந்துரையும் டெல்லி அரசு வழங்கவில்லை என மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருவதால் இதுபோன்ற திட்டங்களை அறிவித்து வருவதாக கூறப்படுகிறது.

Tags : #METRO #DELHI #WOMEN #STUDENTS #FREERIDE