‘டோல் கேட்’ பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய நபர்..! அதிர்வலைகளை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 21, 2019 02:09 PM

ஹரியானாவில் சுங்க சாவடி ஒன்றில் பெண் ஊழியரை தாக்கும் நபரின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Toll Plaza employee hit by a car driver in Gurugram

ஹரியானா மாநிலம் குருக்ரம் என்னும் இடத்தில் அமைந்துள்ள சுங்க சாவடியில் வேலை செய்யும் பணியாளர்களுக்கும், காரில் வந்த நபருக்கும் இடையே கட்டணம் வசூலிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நபர் அருகில் இருந்த பாதுகாப்பு ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அடுத்து சுங்க சாவடியில் வைக்கப்பட்டுள்ள தடுப்பை தள்ளிவிட்டு, சுங்க கட்டணம் வசூலிக்கும் பெண்ணை தாக்கியுள்ளார். இதனை கண்ட பாதுகாப்பு ஊழியர் அந்த நபரை தடுக்க முயற்சித்துள்ளார். இதில் அப்பெண்ணின் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. இதனை அடுத்து உடன் வேலை பார்க்கும் சக பெண் ஊழியர் ஒருவர் வந்து காயமடைந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து சுங்க சாவடி ஊழியர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து சுங்க சாவடி பெண் ஊழியரை தாக்கிய அந்த நபரை போலிஸர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சுங்க சாவடியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது.

Tags : #GURUGRAM #TOLLPLAZA #CCTV #WOMEN