'பொண்ணுங்களுக்கு' மட்டும் இலவசமா?... 'வேண்டாம்'... 'எல்லாரும் காசு கொடுத்து போட்டும்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 15, 2019 11:55 AM

டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்ற நடவடிக்கைக்கு,எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீதரன் (மெட்ரோ மேன்) மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Metro Man Gives BankruptcyWarning To PM Modi On free ride plan

சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.இதனிடையே டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் முன்னாள் தலைவரும்,'மெட்ரோ மேன்' என அழைக்கப்படுபவருமான ஸ்ரீதரன்,பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் 'டெல்லி மெட்ரோவில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதியளித்தால்,மற்ற மாநிலங்களும் இதே கோரிக்கையை எழுப்பும்.

மேலும் இலவச பயணத்தால் ஏற்படும் இழப்பு டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அளிக்கப்படும் என்பது,முட்டாள்தனமான முடிவு.மெட்ரோ ரயில் ஊழியர்களும், அதன் தலைமை நிர்வாகியும் கூட டிக்கெட் வாங்கி சேவையை பயன்படுத்த வேண்டும். கெஜ்ரிவால் இலவச சேவையை நடைமுறைப்படுத்த விரும்பினால், பயணச் செலவை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தலாம். அப்படிச் செய்து இலவச சேவையை நிறுத்திக் கொள்ளலாம்.

இலவச பயணத்தை வழங்கினால்,அதில் ஊழல் ஏற்பட வாய்ப்புண்டு.எனவே பிரதமர் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என ஸ்ரீதரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் ஸ்ரீதரனின் கடிதத்திற்கு பதில் அளித்துள்ள ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சவுரவ் பரத்வாஜ், 'இலவச பயணத்தால் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு ஒரு ரூபாய் கூட இழப்பு ஏற்படாது. இலவச பயணத்திற்கான செலவு அனைத்தையும் டெல்லி அரசு ஏற்றுக் கொள்ளும். முக்கியமாக 'மெட்ரோவில் பெண்கள் பயணம் செய்தால் அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள்' என கூறினார்.

Tags : #METRO #NARENDRAMODI #AAM AADMI #ARVIND KEJRIWAL #DELHI METRO #METRO MAN #BANKRUPTCY #SREEDHARAN