'தல தோனிக்கு ஓய்வு தேவையா?'... 'விமர்சனத்திற்கு பதிலடி தந்த வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 05, 2019 12:14 PM

இந்திய அணி வீரரான மகேந்திர சிங் தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று இலங்கையின் நட்சத்திர வீரர் தெரிவித்துள்ளார்.

Lasith Malinga Says MS Dhoni Should Play Another Year Or Two

உலகக் கோப்பையில் இந்திய அணி, ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியைத் தழுவி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியை இலங்கை அணியுடன் நாளை மோத உள்ளது. இந்நிலையில் தற்போதைய உலகக் கோப்பையில், இந்திய அணியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானவர் தோனி. இவர் நடப்பு உலகக் கோப்பை உடன் தனது ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தோனியை பற்றி கருத்து தெரிவித்து உள்ளார். அதில், ‘தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாட வேண்டும். கடந்த 10 வருடங்களாக சர்வதேசப் போட்டிகளில் சிறந்த ஃபினிஷராக அவர் வலம் வருகிறார். இவரது அனுபவம் இந்திய அணிக்கு முக்கியமான நேரங்களில் கைகொடுக்கும். அதனால்தான் இந்திய அணி சிறந்த அணியாக விளங்கி வருகிறது.

மேலும் இளம் வீரர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையில் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றி இரண்டு ஆண்டுகள் இருந்து கற்றுக் கொடுக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரையில், இந்தியா உலகக் கோப்பை வெல்ல அனைத்து சாத்தியங்களும் உள்ளன. அணியில் பல அனுபவ வீரர்கள் உள்ளனர்’ என லசித் மலிங்கா கூறியுள்ளார்.