‘தாகத்தை மட்டுமில்ல மனசையும் நெரச்சிட்டீங்க சிங்’.. குவியும் பாராட்டுகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Jun 04, 2019 03:15 PM
சாலையில் செல்லும் மக்களுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்கும் முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா முழுவதும் மக்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை தண்ணீர்தான். தமிழ்நாட்டில் தண்ணீர் பிரிச்சனை தீர்க்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். சென்னையின் நீர் ஆதாரங்களாக இருந்த புழல், வீராணம் போன்ற ஏரிகளில் நீர் வற்றி வரண்டு காணப்படுகிறது. இதனால் மக்கள் தண்ணீர் லாரிகளை நம்பி இருக்க வேண்டியுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் குஜராத், மகாராஷ்ட்ரா, டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் படுமோசமாக காணப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீரை பூட்டுப் போட்டு பாதுகாக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு டெல்லி வாசிகள் இலவசமாக தண்ணீர் கொடுத்து உதவுகின்றனர். கடந்த சில நாள்களாகவே பலரும் இந்த உதவியை செய்து வருகின்றனர். முதியவர் ஒருவர் ஸ்கூட்டரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சாலையில் செல்பவர்களுக்கு இலவசமாக கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
