'பள்ளி மாணவர்களிடையே மோதல்'... 'கத்திக்குத்தில் முடிந்த விபரீதம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 03, 2019 11:08 AM

தேனி அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே நடைப்பெற்ற மோதலில், மூன்று மாணவர்களுக்கு  கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

school student clash between school time in kandamanur

ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பள்ளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவருக்கும் இடையே, ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று, இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது, 10-ம் வகுப்பு மாணவனும், அவனது நண்பர்களும்  சேர்ந்து, 12-ம் வகுப்பு மாணவவனைத் தாக்கினர்.

இதனைத் தடுக்க முயன்ற, அவனது நண்பர்களையும் கத்தியால் குத்தி விட்டு 4 பேரும் தப்பிச் சென்றனர். இதில் காயம் அடைந்த 12-ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட 3 மாணவர்களையும், ஆசிரியர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய 10-வகுப்பு மாணவனையும், அவர் நண்பர்களையும் தேடி வருகின்றனர்.

Tags : #STUDENTS #CLASH