பட்டப்பகலில் போலிஸாரை வெட்ட முயன்ற வேன் டிரைவர்..! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 17, 2019 11:18 AM

டெல்லியில் வேன் டிரைவர் ஒருவர் போலிஸாரை வாள் கொண்டு தாக்கிய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Tempo driver attacks policeman with sword

டெல்லியின் பரபரப்பான சாலை ஒன்றில் சீக்கியரான வேன் டிரைவர் ஒருவருக்கும், கார் ஓட்டுநர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கார் ஓட்டுநர் அருகில் இருந்த போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் வேன் டிரைவரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது திடீரென ஒரு பெரிய வாள் கொண்டு போலிஸாரை தாக்க வேன் டிரைவர் முயற்சி செய்துள்ளார். இதனைக் கண்ட அருகில் இருந்த ஒருவர் வேன் டிரைவரை பின்புறமாக பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் வேன் டிரைவர் அவரை தாக்கி விட்டு மீண்டும் போலிஸாரை தாக்க முயன்றுள்ளார்.

இதனை அடுத்து சுதாரித்துக்கொண்ட போலிஸார் சிலநிமிட போராட்டத்துக்குபின் வேன் டிரைவரை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். பின்னர் வேன் டிரைவர் மற்றும் அவரது மகனையும் போலிஸார் கைது செய்துள்ளனர். பட்டப்பகலில் போலிஸாரை தாக்க முயன்ற வேன் டிரைவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #DELHI #SWORD #BIZARRE #TEMPO