'சீ' அசிங்கமா இல்ல' ... 'பொண்ணுங்க முன்னாடி இப்படியா'?... 'மெட்ரோ'வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்' !

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 19, 2019 11:41 AM

டெல்லி மெட்ரோவில் பயணித்த இளம் பெண் ஒருவரை பார்த்து இளைஞர் ஒருவர் சுய இன்பம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக அந்த பெண் பதிவிட்ட ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

Woman Alleges Man Masturbated On Her At Gurgaon Metro Station

இதுதொடர்பாக அந்த பெண் தனது பதிவில் கூறியுள்ளதாவது ''நான் எஸ்கலேட்டரில் இருந்து வெளியே வந்தேன்.அப்போது ஏதோ தவறு நடப்பதை போன்ற உணர்வு ஏற்பட்டது.உடனே நான் பின்னால் திரும்பி பார்த்தேன்.அப்போது அந்த காட்சி என்னை அதிர்ச்சி அடைய செய்தது.என்னை பார்த்து கொண்டே இளைஞர் ஒருவர் 'சுயஇன்பம்' செய்து கொண்டிருந்தார்.உடனே அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்தேன்.உடனே அந்த நபர் என்னை திட்ட தொடங்கினார்.

அங்கு நடந்து கொண்டிருந்த அனைத்தையும் அங்கிருந்த பொது மக்கள் பார்த்து கொண்டிருந்தார்கள்.நான் உதவிக்கு அழைத்தும் யாரும் உதவிக்கு வரவில்லை.இது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.பெண்களின் பாதுகாப்பிற்கு மெட்ரோ தான் சிறந்தது என கூறுகிறார்கள்.ஆனால் இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது, அதை நினைத்து அவமானபடுகிறேன்.மெட்ரோவில் பெண்களுக்கு தேவை இலவச பயணம் இல்லை. பாதுகாப்பான பயணம் மட்டுமே.அதற்கு அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும்'' என தனது பதிவில் கூறியுள்ளார்.

அவர் தனது பதிவினை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு டேக் செய்திருக்கிறார். இதனிடையே மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பிற்காக அதிகமான காவலர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : #METRO #NARENDRAMODI #METRO STATION #GURGAON #CHIEF MINISTER ARVIND KEJRIWAL #MASTURBATED