'நீ தினமும் கடைக்கு வா சம்பளம் தரேன்'...'சிறுமியை மிரட்டி'...'பாஜக பிரமுகர்' செய்த கொடுமை'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 11, 2019 01:32 PM

வறுமையின் காரணமாக வேலைக்கு வந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

BJP activist allegedly raped a minor girl at Nagenahalli village

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்.டீ கடை நடத்தி வரும் இவர்,பாஜக சார்பில் போட்டியிட்டு கிராமப் பஞ்சாத்தில் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் தனது டீ கடையில் உதவியாளர் ஒரு பணியாளர் தேவைப்பட்ட நிலையில்,வறுமையின் காரணமாக சிறுமி ஒருவர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.அவருக்கு நாள் ஒன்று ரூ.25 முதல் ரூ.50 வரை சம்பளம் வழங்கியுள்ளார் சந்திரசேகர்.

இதனிடையே சில நாட்கள் கழித்து தனது வீட்டில் வேலை இருப்பதாகவும்,அதனை செய்தால் அதிக பணம் தருவதாகவும் கூறி அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கு சென்றதும் சிறுமியை வீட்டிற்குள் வைத்து கதவை அடைத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து சிறுமி சத்தம்போட முயல, அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சிறுமிக்கு ரூ.50 கொடுத்துவிட்டு, இந்தச் சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், அப்படிச் சொன்னால் சிறுமியையும், அவரது குடும்பத்தையும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது போன்று  4 மாதங்கள் இந்த கொடுமையை அச்சிறுமி அனுபவித்து வந்துள்ளார்.இதனிடையே சிறுமியின் உடல்நிலையில் மாறுபாடுகள் தெரியவர,சிறுமியின் தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கு சிகிச்சை அளித்ததில் சிறுமி கர்ப்பமாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தாயார் சிறுமியை விசாரிக்க, அவர் நடந்ததைச் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளிக்க,போக்சோ சட்டத்தின் கீழ் சந்திரசேகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிராமப் பஞ்சாத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவரே சிறுமியை நாசம் செய்த சம்பவம் அந்த பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #BJP #CHANDRASHEKHAR #NAGENAHALLI VILLAGE