கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.... சிறுமி கொலை வழக்கில் புதிய திருப்பம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 31, 2019 12:47 PM

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர், காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

one arrested for coimbatore child murder case

கோவையில் துடியலூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி, கடந்த  25-ம் தேதி மாலை, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென காணாமல் போனார்.  இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தடாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசாரும், உறவினர்களும் குழந்தையைத் தேடி வந்தனர். இரவு முழுவதும் குழந்தை கிடைக்காத நிலையில்,  26-ம் தேதி காலையில் வீட்டின் அருகே சிறுமி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் மீட்கப்பட்ட சிறுமியின் உடலை காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக, கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உறுதியானது. குற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

குற்றவாளிகளை பற்றிய விவரம் தெரிந்தவர்கள், தங்களிடம் தகவல் தெரிவிக்கும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதற்காக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை 6 நாட்களுக்குப் பிறகு போலீஸார் கைது செய்துள்ளனர்.

Tags : #SEXUALABUSE #MURDER #GANGRAPE #COIMBATORE #CHILDABUSE #MISSING #POSTMORTEM #ARREST