'16 வயது மாணவனுக்கு 4 நாளாக பாலியல் தொல்லை’: போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 28, 2019 11:00 AM

மதுரையில் 16 வயது மாணவனுக்கு ஆசிரியை ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sexual abuse to male student school teacher arrested

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா என்கிற ஆசிரியை. இவர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பள்ளிச் சிறுவர்களுக்கு தனியாக டியூசன் எடுத்து வந்துள்ளதாகக் கூறப்பபடுகிறது.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை விருப்பத்திற்கு மாறாக,  அழைத்துச் சென்ற ஆசிரியை நிர்மலா ஒத்தக்கடையில் உள்ள தனி அறையில் வைத்து 4 நாட்களாக சிறுவனுக்கு பாலியல் தொந்தரவுக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தகவல் அளித்ததைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் ஆசிரியை நிர்மலாவின் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

அவர்கள் அளித்த புகாரின் பெயரில், காவல்துறையினர் ஆசிரியை நிர்மலாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.