கோவை சிறுமியின் கொலை வழக்கு... குற்றவாளியின் அதிர வைத்த வாக்குமூலம்!...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 01, 2019 11:02 AM

கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமார், கொடுத்துள்ள வாக்குமூலம் போலீசாரை அதிரவைத்துள்ளது.

coimbatore girl child rape and murder case

கோவையில் கடந்த 25-ம் தேதி காணாமல் போன சிறுமி, மறுநாள் வீட்டின் அருகிலேயே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.  தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக 14 தனிப்படைகள் அமைத்து, காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். சிறுமியை கொலை செய்ததாக சந்தோஷ்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள தனது தாத்தா வீட்டிற்கு, சந்தோஷ்குமார் அடிக்கடி வந்து சென்றது தெரியவந்துள்ளது.  சந்தோஷ்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், சிறுமி சத்தம்போட்டததால் பதற்றமடைந்த அவர், கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை நடந்த அன்றைய தினமே எதிர்பாராதவிதமாக சந்தோஷ்குமாரின் பாட்டியும்  உயிரிழந்துள்ளார்.

அதனால், தனது டி-சர்ட்டை பயன்படுத்தி சிறுமியின் சடலத்தை மறைத்த அவர், அதனை வீட்டின் ஓரமாக வைத்துள்ளதாகவும் தெரிகிறது. சிறுமி சடலமாக கிடந்த இடத்தில் கிடந்த டி-சர்ட்டை வைத்துதான் போலீசார் சந்தோஷ்குமார் மீது சந்தேகமடைந்துள்ளனர். பின்னர் அவரை கைதுசெய்து விசாரித்தபோது, இதனை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தக் கொலையில் இன்னும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சிறுமியின் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமாரை வரும் 15-ம் தேதி வரை காவலில் வைக்க, கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : #SEXUALABUSE #GIRLCHILD #COVAI #MURDER #ARREST