'என்ன கொடுமை எல்லாம் நடந்திருக்கு'...அதிரவைக்கும் சிறுமியின்'...'பிரேத பரிசோதனை அறிக்கை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 29, 2019 11:55 AM

கோவையில் சிறுமி காணாமல் சென்று பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில்,சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பின்னர் கொலை செய்யப்பட்டிருப்பதாக பரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Coimbatore 7 Year Old Has Been Gang Raped shocking Post Mortem Report

கோவையில் காணாமல் போன சிறுமி பின்பு வீட்டின் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது தமிழகத்தையே அதிரவைத்தது.இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில், சிறுமியின் உடற்கூராய்வு அறிக்கையும் வெளியாகியுள்ளது. அந்த சிறுமி ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கும் கொடூரம் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.சிறுமி சத்தம் போட்டு விடக் கூடாது என்பதற்காக,அவரது வாயில் துணியை அடைத்து வைத்து இந்த வன்கொடுமையை  அரங்கேற்றி இருக்கிறார்கள் அந்த மனித அரக்கர்கள்.

மேலும் கொடூரம் என்னவென்றால் சிறுமியை அடித்துத் துன்புறுத்தி, கயிறு ஒன்றின் மூலம் கழுத்தை நெரித்தபோது, கழுத்தில் உள்ள நரம்பு துண்டாகி சிறுமியின் உயிர் பிரிந்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் தொடர்ச்சியாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே குற்றவாளிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டிவரும் காவல்துறையினர் குற்றவாளிகளை ‌பற்றிய விவரம் தெரிந்தவர்கள், தங்களிடம் தகவல் தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.துப்புக் கொடுப்பவர் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags : #SEXUALABUSE #POST MORTEM REPORT #COIMBATORE #GANG RAPE