'சின்ன பொண்ண நாசம் பண்ணிட்டான்'...'எங்க கிட்ட விடுங்க சார் இவன'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 04, 2019 04:50 PM

தமிழ்நாட்டையே உலுக்கிய கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரை பொதுமக்கள் சேர்ந்து நையப்புடைத்தனர்.

Public attack Santosh Kumar who confessed of sexually assault

கோவையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி காணாமல் போன சிறுமி, மறுநாள் வீட்டின் அருகிலேயே சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தை கொந்தளிக்க வைத்தது.இதனிடையே குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக, 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து சிறுமியைக் கொலை செய்ததாக சந்தோஷ்குமார் என்ற இளைஞரை கடந்த 31ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.கடந்த 6 நாட்களாக அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.இதனிடையே சந்தோஷ் குமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்த மக்களுக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருப்பது சிறுமி கொலையில் கைதான குற்றவாளி என தெரியவந்தது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை முடிந்து வெளியே வந்த சந்தோஷ் குமாரை காவல்துறையினர் எதிரிலேயே சரமாரியாக தாக்கத் தொடங்கினார்கள்.

''சின்ன பொண்ண நாசம் பண்ணிட்டானே,இவன எப்படி சும்மா விடுவது' என்ற ஆதங்கத்துடன் சந்தோஷ் குமாரை பொதுமக்கள் தாக்கினார்கள்.இதையடுத்து பொதுமக்களை சமாதானபடுத்திய காவல்துறையினர் சந்தோஷ் குமாரை அங்கிருந்து அழைத்து சென்றார்கள்.

Tags : #SEXUALABUSE #RAPE #MURDER #SANTOSH KUMAR #SEXUALLY ASSAULTING #COIMBATORE