மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. அதிரவைத்த மூவரின் வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 08, 2019 10:44 AM

விழுப்புரம் - புதுச்சேரி எல்லையில் 9-ம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்திச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

School student gang raped near puducherry 3 arrested

ஆரோவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அதேப் பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள நரேஷ் என்பவர், சிறுமியுடன் நட்பாக பழகி வந்ததாகத் தெரிகிறது. டியூஷனுக்குச் சென்றச் சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றிய நரேஷ், சேதராப்பட்டு என்ற இடத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத வீட்டிற்கு அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கு மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து, நரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ராஜா, சூர்யா ஆகியோர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து பள்ளி மாணவியின் தாயார் ஆரோவில்  காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து விழுப்புரம் வானூரில், பாலியல் வன்கொடுமை செய்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது ஆள் கடத்தல், கொலை முயற்சி, போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவலதுறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SCHOOLSTUDENT #VILLUPURAM #AUROVILLE #ARRESTED #VICTIM #SEXUALABUSE #PUDUCHERRY